டிசம்பர் 1 ஆம் தேதிமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. பின்னர் சிறிது காலம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 15 ஆம் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கான கடைசி நாள் நேற்று ஆகும்.
ஃபாஸ்ட் டேக் என்பது RFID தொழில்நுட்பத்தினைக் கொண்டு இயங்கும் கோடிங் கொண்ட ஸ்டிக்கர் ஆகும்.

மேலும் இந்த ஸ்டிக்கர் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ளதால், டோல் கேட்டில் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும்போது, பணம் தானாக எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சேவையானது பயணிகளின் நேரம் வீணாவதை குறைக்க உதவும்.
இனி ஃபாஸ்ட் டேக் முறைப்படி மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் செலுத்த ஒரே ஒரு லேன் இருக்கும்.
ஆனால் இந்த வகையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஃபாஸ்ட் டேக் கணக்கில் பணம் இல்லாமல் செல்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் அவர்கள் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும்.
அதேபோல் ஃபாஸ்ட்டேக் வசதியில்லாத வாகனங்கள், பாஸ்டேக் டோல் வழியே சென்றால், இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.