Mobile

விறுவிறுப்பான விற்பனை: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4000 தள்ளுபடி!!

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி வேரியண்டுகளுக்கு பொங்கலையொட்டி விலைகுறைப்பு ரூ. 2000 வரை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் விவோ இசெட் 1 எக்ஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் கொண்ட மாடலுக்கு ரூ. 4000 வரை இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது

1.     விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.21,990 (₹ பழைய விலை)

2.     விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.17,990 (₹ புதிய விலை)

விறுவிறுப்பான விற்பனை: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4000 தள்ளுபடி!!

இந்த அதிரடி விலைக்குறைப்பால்  பயனர்கள் பலரும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாய் உள்ளது.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹூவாய் மைமாங்க் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil