2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.
டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.
இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது.
மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்த டிக் டாக் செயலி 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது Family Pairing என்ற அந்த சேவையின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் டிக்டாக் அக்கவுண்ட்டை தம்முடன் இணைக்க முடியும்.
இதன் வழியாக அவர்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

மேலும் டிக் டாக்கில் உள்ள ஸ்கிரீன் டைம் மேனேஜ்மென்ட் என்ற அம்சத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் டிக்டாக்கில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தவும் அனுமதித்துள்ளது.
மேலும் மற்றுமொரு அம்சமான டிக்டாக் ரெஸ்ட்ரிக்டட் மோட் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிற கன்டென்ட்டுகள் ஒளிபரப்பாவதை கட்டுப்படுத்த முடியும்.
இந்த அம்சங்கள் உண்மையில் குழந்தைகளை பாதுகாப்பாக டிக்டாக்கினை பயன்படுத்த அனுமதிக்க முடியும்.