Apps

Amazon Prime Day என்ற பெயரில் நூதனக் கொள்ளையிடும் போலி இமெயில்!

நாளையும், நாளை மறுநாளும் அமேசான் பிரைம் டே சேல் நடக்கிறது. இதில் பிரைம் சந்தாவாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற பொருட்கள், தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.

 இந்த நிலையில், அமேசான் பிரைம் டே சேல் என்ற பெயரில் போலியான இமெயில் மூலம், அமேசான் லிங்க் அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. McAfee எனப்படும் வைரஸ், ஆண்டி வைரஸ் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அந்த லிங்கை க்ளிக் செய்யும் போது, அமேசானை போன்ற போலியான பக்கம் திறக்கப்படுவதாகவும், அதன் மூலம் பணம் மோசடி செ்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Amazon Prime Day என்ற பெயரில் நூதனக் கொள்ளையிடும் போலி இமெயில்!

எனவே, பயனாளர்கள் இமெயில் மூலமாக வரக்கூடிய அமேசான் லிங்க் ஓபன் செய்யாமல், நேரடியாக அமேசான் வெப்சைட்டில் இருந்து ஷாப்பிங் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆன்லைனில் பணம் செலுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாம் தளங்கள் (Third Party) வெப்சைட்டில் மூலமாக பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். 

பொருட்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாதாரராக பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு மாதம் 129 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இவ்வாறு 129 ரூபாய் செலுத்தி ‘பிரைம் மெம்பர்’ ஆக மாறும் பட்சத்தில், மற்ற வாடிக்கையாளர்களைக் காட்டிலும் ஃபாஸ்ட் டெலிவரி, கேஷ்பேக் ஆஃபர், உடனடி முன்பதிவு என அதிகமான சலுகைகள் பெறமுடியும். 

Related posts

ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த புது வசதி..

TechNews Tamil

2எம்பிக்கும் குறைவான மெமரி அளவில் வெளியாகியுள்ள இன்ஸ்டாகிராம் லைட் செயலி!!

TechNews Tamil

ட்விட்டரில் ட்விட்டுகளை இனி ஷெட்யூல் செய்யலாம்!!

TechNews Tamil