மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் வீடியோ கால் சேவையானது அதிக பயன்பாட்டினைக் கொண்டு உள்ளது, வீடியோ செயலி மூலமே பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.
ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவியதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது.
சில மாதங்களுக்கு முன்னர், ஜூம் பயன்பாட்டால் பாதுகாப்பின்மை பிரச்சினை கிளம்பியது, இதனால் ஜூம் செயலி தடைசெய்யப்பட, ஜூம்செயலிக்கு மாற்று போல் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 49 பேர் பங்கேற்கும் வீடியோ காலிங்க் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்தநிலையில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது.
அதாவது ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்க மீட்டிங்கில் கலந்து கொள்வோர் பேச முடியாது. இந்த அம்சம் கொரோனா ஊரடங்கு சூழலில் வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களைக் கருத்தில் கொண்டு களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் களம் இறங்கப்பட்டுள்ள மைக்ரோசாப்டின் இந்த சேவையானது சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.