உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு வலைதளம் ஃபேஸ்புக் ஆகும், ஃபேஸ்புக் நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் ஆன பின்னரும் இதன் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.
இந்த ஃபேஸ்புக் மூலம் ஆன்லைன் சேட்டிங்க், புகைப்படம் ஷேர் செய்தல் மட்டுமல்லாது, குரூப் சேட்டிங்க், ஆன்லைன் ஷாப்பிங்க் மற்றும் ஆன்லைன் விற்பனை என பலவும் நடைபெறுகிறது.
ஃபேஸ்புக் அவ்வப்போது சில மாறுதல்களை செய்வதுண்டு, அந்தவகையில் தற்போது தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இந்த புதிய லோகோ அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது, புதிய லோகோ குறித்து பலரும் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
தற்போதுவரை கசிந்துள்ள தகவலின்படி, புதிய லோகோ ஒரே நிறத்தில் இல்லாமல் ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளையும் காட்டும்விதமாக பல நிறங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுவருகிறது.
மொத்தத்தில் பார்க்க கூகுளின் பல வண்ண லோகோ போல் இருக்கும் என்று தெரிகிறது.