Apps

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் எடுத்த முடிவு!!

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி தற்போது வரை 2700 பேரை கொன்று குவித்ததோடு, உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. பல நாடுகளில் போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தும் பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக முக்கியமான பல நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஃபேஸ்புக் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு மே 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் இருந்தது.

தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் எடுத்த முடிவு!!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் நிகழ்வும் ரத்தாகி உள்ளது.

அதேபோல் 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. உலக நாடுகளில் இருந்து ஏறக்குறைய 200 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கொரானோ அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்..!! ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..

TechNews Tamil

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

TechNews Tamil

போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil