வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல சமூக வலைதளங்கள் இருப்பினும் அதிக அளவில் பயனர்களைக் கண்ட ஒன்று ஃபேஸ்புக் மட்டுமே ஆகும்.
ஃபேஸ்புக்கால் பல சர்ச்சைகள் ஒரு புறம் எழுந்தாலும், ஃபேஸ்புக் நிறுவனத்தால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளது.
அதாவது ஃபேஸ்புக்கில் பாதுகாப்பின்மை நிலவி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதாவது பயனர்களின் தகவலை மற்ற நிறுவனங்களிடம் பொருளாதார தேவைக்காக பகிர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த கேள்விகள் எழுப்பப்பட்டால், சில நேரங்களில் அதற்கான பதிலை தெரியாமல் நடந்ததாக, அதுவும் சாஃப்ட்வேர் பிரச்சினை என்று கூறுவதும், பல நேரங்களில் அப்படி நடக்கவே இல்லை என மறுப்பதுமாக இருந்துவருகிறது.
தற்போது, ஃபேஸ்புக் பயனர்களின் 419 மில்லியன் தொலைபேசி எண்கள் மற்ற ஆன்லைன் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் தற்போது பலரும், தங்களது மொபைல் எண்களை இதுபோன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளனர். இது பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.