பேஸ்புக் பயனாளர்கள் தங்களுடைய பேஸ்புக்கை, ஆப்பிள் டிவியில் பயன்படுத்தும் வகையிலான வசதி கொண்டு வரப்படுகிறது. விரைவில் மற்ற ஸ்மார்ட் டிவிகளிலும் இந்த வசதி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகவலைதளங்களில்
தொன்றுதொட்டு நம்பர் 1 இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஃபேஸ்புக்கின் உச்சக்கட்ட அப்டேட்டாக டிவியிலும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக ‘ஆப்பிள் டிவி’ தயாரித்துள்ளது. இது இந்தாண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும்.

மெசேஜிங், வீடியோ கால் என வழக்கமாக பேஸ்புக்கில் உள்ள அம்சங்கள்
அனைத்தும் ஆப்பிள் டிவியில் பயன்படுத்த முடியும். இதே போல், ஃபேஸ்புக் நிறுவனம் மற்ற நெட்பிளிக்ஸ், டிஸ்னி, HBO, அமேசான் ஆகியவைகளை அணுகி, அவர்களுடைய சேவைகளையும் ஆப்பிள் டிவியில்
கொண்டு வருமாறு அறிவறுத்தியுள்ளது..
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய
ஆப்பிள் டிவிக்க ‘Catalina’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் வழக்கமான டிவி
போலவே ரிமோட், ஸ்பீக்கர் எல்லாம் இருக்கும். கூடுதலாக ஆப், யூடியூப் போன்ற ஸ்டீரிமிங் வசதிகளும் இருக்கும்.