பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க எண்ணி அதற்கான அம்சங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பேஸ்புக் நிறுவனம் மெஸ்சேன்ஜர் சாட் செயலியில் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பும் அம்சத்தையோ அல்லது வாய்ஸ் கால்லிங் அழைப்புகளையோ யார் மேற்கொள்ளலாம் என்பதற்கான அனுமதியை வழங்குகிறது. அதற்கேற்ப நீங்கள் செட்டிங்க்ஸினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் பயனர்கள் அனுப்பும் படங்களை தானாக மழுங்கடிக்கும் அம்சத்தையும் அடுத்தகட்டமாக களம் இறக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும், மெசேன்ஜரில் பாதுகாப்பு கருதி லாக்கிங் அம்சத்தையும் கொண்டு வரும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது பாதுகாப்பு கருதி பேஸ் அன்லாக் அல்லது பிங்கர் பிரிண்ட் அன்லாக் செய்தல் என்னும் அம்சம் ஐஓஎஸ் சேவையில் வழங்கப்பட்டதைப் போல் ஆண்ட்ராய்டிலும் களம் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.