Apps

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி!!

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையினை ஸ்மார்ட்போன் வைத்துள்ள யாரும் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.

சாதாரண chat களை பண்ண விரும்பும் பயனர்கள் பொதுவாக இந்த மெசஞ்சர் சேவையின் மூலமே அனுப்ப முடியும் என்பதால், இந்த சேவையினை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள மெசஞ்சர் சேவையானது, சமீபத்தில் டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்தது.

அதாவது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சேவையானது, கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனாக ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை வெளியிட்டது.

அந்தவகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் பயனர்கள் தங்களின் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதியை வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அம்சத்தின் மூலம் ஐபோன் பயனர்கள் மெசஞ்சர் செயலியை டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி மூலம் லாக் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் முதற்கட்டமாக ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

லாக் செட்டிங்கினைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் கழித்து லாக் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற ஆப்ஷன்களும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா! நிலைகுலைந்த நெட்வொர்க்குகள்

TechNews Tamil

ஏர்டெலில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சலுகை!!

TechNews Tamil

தீபாவளியினை ஃபேஸ்புக்கிலும் கொண்டாடலாம்.. வெளியானது சிறப்பு அம்சம்!!

TechNews Tamil