Apps

பொருளாதார ரீதியாக சரிவினை சந்திக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக், நஷ்டத்தை சந்திக்கும் வகையிலான அம்சங்களை மட்டுமே புதிதாக கொண்டு வருகிறது, தற்போது இதன் வருவாய் மிகக் கணிசமாக குறைந்துள்ளது, இனி வரும் காலங்களிலும் அதன் வருவாய் குறையுமே தவிர ஏற வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகின்றன.

பயனர்களின் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்துள்ளதற்கு மே  மாதம் அமலுக்கு வந்த தனியுரிமை விதிகள் தான் காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இதனால் பலரும் பேஸ்புக் பயன்படுத்த தயக்கம் கொள்ளவே செகின்றனர்.

பொருளாதார ரீதியாக சரிவினை சந்திக்கும் ஃபேஸ்புக்

தற்போதும், ஃபேஸ்புக் நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை வணிகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் எதிர்கொண்டுள்ளது என்பதை தான் முடிவுகள் காட்டுகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை, போலி செய்திகள் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத கேள்விகளை இன்னும் எதிர்கொண்டு தான் இருக்கிறது.

சில சமயங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தான் சிறந்த விஷயங்களுக்கு மதிப்பு கொடுக்க தவறுகிறது. பயனாளர்கள் கூறுவதை நடைமுறைப்படுத்துவதிலும், வளர்ந்து வரும் பிளவுபட்ட உலகில் நடுநிலையான தளமாக நிலைப்பதிலும் ஆடிப் போய் உள்ளது.

ஃபோட்டோக்கள் பகிரும் தளம் இன்ஸ்டாகிராம். தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது, அது போலவே தான் மற்றுமொரு பெரிய செயலியான வாட்ஸ் ஆப்பும் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதுநாள் வரையில் வாட்ஸ் ஆப் விளம்பரங்களை காண்பிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இனி ஃபேஸ்புக்கில் எவ்வளவு லைக்ஸ் என்று பார்க்க முடியாது!!

TechNews Tamil

பக்காவாக அறிமுகமானது கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோவில் க்ரூப் கால் வசதி!!

TechNews Tamil

அறிமுகமானது ஓலாவின் பைக் சேவை!

TechNews Tamil