உலகினை உலுக்கி வரும் விஷயங்களில் ஒன்றாக தற்போது இருப்பது கொரோனா வைரஸ் ஆகும். இந்த வைரஸ் தற்போது சீனாவில் உள்ள வவ்வாலை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக ஆய்வு அறிக்கை முடிவுகள் வெளியாகின.
சீன மக்கள் அதிக அளவில் இந்த தாக்குதலுக்கு உள்ளாக காரணம், அவர்கள் பாம்புகளை உணவாக உண்ணுவதுதான். சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
தற்போது சீனாவில் 12,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் உள்ள ஹாங்காங்க் மற்றும் தைவானில் உள்ள கூகுள் கிளை அலுவலங்கள் சமீபத்தில் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் ஃபேஸ்புக் தளத்தில் பீதியைக் கிளப்பும் விதமாக பரவி வருகின்றன. தற்போது போலித் தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
மேலும் அவ்வாறு போலித் தகவல்கள் ஏதேனும் பதிவிடப்பட்டால், பேஸ்புக் உடனுக்குடன் அதனை தளத்தில் இருந்து நீக்கிவிடும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.