ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை பேஸ்புக் வாங்குவதாக கடந்த சில மாதங்கள் தகவல் வெளியாகின.
அதன்படி தற்போது, பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்கை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்கின் விலை சுமார் 43,574 கோடி ரூபாய் ஆகும்.
ஜியோ ஏற்கனவே டிராய்க்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையினை செலுத்த வேண்டிய நிலையில் இந்த பங்கின் மூலம், ஜியோ அதன் நிலுவைத் தொகையினை மொத்தமாக செலுத்திவிடும்.

5 ஆண்டுகளுக்குள் தொலைத்தொடர்புத் துறையில் உச்ச கட்ட வளர்ச்சிக்குச் சென்ற, ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
பேஸ்புக் கூறும்போது, “இந்தியாவில் எங்கள் வணிகத்தினைத் துவக்கியுள்ளது. ஜியோவுடன் இணைய நாங்கள் விரும்பி இந்த பங்கினை வாங்கியுள்ளோம்.
அனைத்து அளவிலான வணிகங்களிலும் கால் வைக்க எண்ணி, இந்தியா முழுவதும் சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு” என்று தெரிவித்துள்ளது.