Apps

கொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்களை நீக்க முடிவு எடுத்துள்ள ஃபேஸ்புக்!!

உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் பரவியது அதிர்ச்சிகரமான விஷயமாகும். சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

சீனா சென்று திரும்பிவரும் மக்களை மிகவும் தீவிரமாக பரிசோதித்த பின்னரே இந்தியாவுக்குள் அனுமதித்தனர். அந்த நிலையிலும், இந்தியாவிலும் இந்த பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் 12,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 2700 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்களை நீக்க முடிவு எடுத்துள்ள ஃபேஸ்புக்!!

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோய்க்கான தீர்வுகள் குறித்தும் பலவிதமான மருத்துவக் குறிப்புகள் குறித்து பேஸ்புக்கில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்தத் தகவல்கள் தற்போது, அதிக அளவில் போலியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இந்தத் தகவல்களை தடை செய்யக் கோரி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் எச்சரித்து உள்ளது.

இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் போலித் தகவல்களை நீக்குவது குறித்து  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related posts

“அமேசானின் ப்ரைம் டே”க்கு சவாலாக ‘ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல்!

TechNews Tamil

சம்பள நாட்களுக்கான சலுகைகள்… ஸ்மார்ட் டிவிகளுக்கு 60% வரை சலுகைகள் வழங்கும் அமேசான்!!

TechNews Tamil

வாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்!!

TechNews Tamil