ஃபேஸ்புக்கிற்கு அடுத்த படியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு தளம் வாட்ஸ் அப் ஆகும். இதனைப் பயன்படுத்தாத இளைஞர்களை நம்மால் பார்க்க முடியாது.
ஆனால் சமீபத்தில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் தற்போது மத்திய அரசுக்கு இது தொடர்பாக ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

உளவு பார்க்கும் ஒரு சாப்ட்வேரால், இந்தியாவில் 20 பேரின் வாட்ஸ்ஆப் தகவல்கள் மட்டுமே உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாட்ஸ் ஆப் மூலம் வேறு ஏதேனும் தகவல்கள் எடுக்கப்படுகிறதா? என்பதற்காக மட்டுமே இவ்வாறு உளவு பார்த்ததாக தெரிகிறது.
ஆனால் இதுவரை விசாரணை செய்ததில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு அம்சங்கள் மேலும் வலுப்படுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவிலான பாதுகாப்பு இருக்காது” என்று பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.