உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக இருந்து வருவது ஃபேஸ்புக்கே ஆகும். ஃபேஸ்புக் கணக்கு இல்லாத இளைஞர்கள் ஒருவரைக்கூட பார்க்க முடியாது.
இன்ஸ்டாகிராம் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது, அது போலவே தான் மற்றுமொரு பெரிய செயலியான வாட்ஸ் ஆப்பும் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ளது.
இவை அனைத்தையும் மிஞ்சும் அளவு ஃபேஸ்புக் அதிக பயனர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது.

நாளுக்கு நாள் ஃபேஸ்புக் ரீதியாக பல சர்ச்சைகள் எழுந்தவாறே உள்ளது. போலிக் கணக்குகள் பலவும் தற்போது அதிகமான வண்ணமே உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை, போலி செய்திகள் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத கேள்விகளை இன்னும் எதிர்கொண்டு தான் இருக்கிறது.
தற்போது ஃபேஸ்புக் 3.2 பில்லியன் போலி கணக்குகளை தனது சேவையிலிருந்து நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவலை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளை ரீதியான துஷ்பிரயோகம், சட்டவிரோத செயல்கள், தீவிரவாத செயல்கள், குழந்தைகள் பாலியல் சுரண்டல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற தேவையற்ற செயல்களே ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.