Apps

கொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்கள் கொண்ட 70 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ள ஃபேஸ்புக்!!

உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் பரவியது அதிர்ச்சிகரமான விஷயமாகும்.

கொரோனாவில் பல லட்சக்கணக்கிலான உயிர்களைக் காவு கொடுத்த நிலையில், தற்போதும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோய்க்கான தீர்வுகள் குறித்தும் பலவிதமான மருத்துவக் குறிப்புகள் குறித்து பேஸ்புக்கில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்கள் கொண்ட 70 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ள ஃபேஸ்புக்!!

ஆனால் இந்தத் தகவல்கள் தற்போது, அதிக அளவில் போலியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இந்தத் தகவல்களை தடை செய்யக் கோரி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் எச்சரித்து உள்ளது.

இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் போலித் தகவல்களை நீக்குவது குறித்து  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தரவுகளை ஆட்டோமேஷன் முறையில் ஆய்வு செய்து, பேஸ்புக் நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளது. 

Related posts

பிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்..!! ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..

TechNews Tamil

கடை திறந்திருக்கான்னு தெரியணுமா? கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அம்சம்!!

TechNews Tamil

வாட்ஸ்ஆப் போட்டோ, வீடியோக்களை போனில் அழிப்பது எப்படி?

TechNews Tamil