உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள செயலிகளால் ஒன்றுதான் ஃபேஸ்புக். வங்கிக் கணக்கில் அக்கௌண்ட் இல்லாத இளைஞர்கள்கூட இருப்பார்கள் ஆனால் ஃபேஸ்புக்கில் அக்கௌண்ட் இல்லாத ஆனால் ஃபேஸ்புக்கில் அக்கௌண்ட் இல்லாத இளைஞர்களைப் பார்க்க முடியாது.
கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையினை அறிவிக்க பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் என அனைவரும் ஃபேஸ்புக்கில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க பேஸ்புக்கில் அதிக அளவில் போலியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் போலித் தகவல்களை நீக்குவது குறித்து அறிவிப்பினை வெளியிட்டது.
அதாவது தரவுகளை ஆட்டோமேஷன் முறையில் ஆய்வு செய்து, பேஸ்புக் நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கியது.
அந்தவகையில் தற்போது மீண்டும் பேஸ்புக் நிறுவனம் 1196 பேஸ்புக் அக்கவுண்ட்கள், 7947 பக்கங்கள், 110 குரூப்கள் என பலவற்றை நீக்கியுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக் 14 நெட்வொர்க்குகளை சேர்ந்த அக்கவுண்ட்கள், பக்கங்கள் மற்றும் குரூப்களை நீக்கிய நிலையில் தற்போது மீண்டும் அடுத்தகட்டமாக நீக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது.