Apps

இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்யும் ‘ஃபேஸ்ஆப்’

சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரென்டிங்கில் இருப்பது இந்த ‘ஃபேஸ்ஆப்’ தான். ஒரே நாளில் பயங்கர வைரலான இந்த செயலி, தற்போது அனைவரது ஸ்மார்ட்போனிலும் இடம் பிடித்துவிட்டது. நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும்.

இன்னிலையில் இந்த ஆப் தங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளாக் செய்யப்பட்டாதாக டிவிட்டரில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை கேட்ஜெட் 360-ம் உறுதி செய்துள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களை இந்த செயலி ப்ளாக் செய்திருந்தாலும்,  ‘ஃபேஷ்ஆப்’ இன்னும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெருகிறது. 

இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்யும் 'ஃபேஸ்ஆப்'

நீங்கள் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளராக இருந்தால், இந்தியாவில் இந்த  ‘ஃபேஸ்ஆப்’ செயலியை பயன்படுத்திக்கொண்டிருந்தால், “Something went wrong, Please try again” என்ற ஒரு எச்சரிக்கை உங்களுக்கு தென்படும். அதே நேரம் iOS பயன்பாட்டாளர் என்றால் இந்த செயலி “ApiRequestError error 6 – Operation couldn’t be completed” என்ற தகவலை உங்களுக்கு அளிக்கும். இந்த பிரச்னை முதலில் டிவிட்டரில் எழுப்பப்பட்டது. பின் கேட்ஜெட்ஸ் 360-யும் இதனை உறுதி செய்துள்ளது. 

இந்த ‘ஃபேஸ்ஆப்’ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி. இதில், நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் மூன்று இடங்களில் நிற்கிறது.

Related posts

இந்தியாவில் டிக் டாக் தடையால் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ள சீன நிறுவனம்!!

TechNews Tamil

டாட்டா ஸ்கையில் அதிரடிக்கும் அசத்தலான ஆஃபர்கள்!

TechNews Tamil

அமேசான் கிடங்கில் இருந்து 78 போன்களைத் திருடிய ஊழியர்கள்!!

TechNews Tamil