Apps

வாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்!!

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் வெப்பில் தற்போது பாதுகாப்பினை அதிகரிக்கும் வகையில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியானது வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்!!

வாட்ஸ்அப் செயலியானது வெப் தளத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முன் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் போன்ற சோதனையை கொண்டு அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக வாட்ஸ் வெப் தளத்தினை நாம் லாகின் செய்யும் போது நம்முடைய ஸ்மார்ட்போன் மூலம் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்தே வாட்ஸ் ஆப் வெப் தளத்தினைப் பயன்படுத்த முடியும்.

இதனால் பிறரால் நம்முடைய வாட்ஸ் அப்பானது பயன்படுத்துவடு தவிர்க்கப்படும். இது மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என்று பயனர்களால் கூறப்படுகின்றது.

Related posts

அறிமுகமானது ஓலாவின் பைக் சேவை!

TechNews Tamil

ரியல்மி நிறுவனத்தின் Realme PaySa டிஜிட்டல் கட்டண முறை!!

TechNews Tamil

அமேசானின் 5 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கான விற்பனை ஆரம்பம்!!

TechNews Tamil