ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அவ்வப்போது அசத்தலான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில் ரூ 96 என்ற திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது, அதாவது 180 நாள் வேலிடிட்டி என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது அன்லிமிடெட் வாய்ஸ்கால், இலவச ரோமிங், 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை கொண்டுள்ளது.
ரூ.96 ப்ரீபெய்ட் பிளான் ஆனது கோல்டு பிளானாக, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் அனைத்து நெட்வொர்க் மற்றும் தேசிய ரோமிங்கிற்கு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம்.
ரூ. 118 பிளான்மூலம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேச முடியும்.
ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் கிடைக்கக்கூடியது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ .1,699 ப்ரீபெய்ட் பிளானின் வேலிடிட்டி
455 நாட்கள் ஆகும். அதாவது 90 நாட்களுக்கு
கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.