வாட்ஸ் ஆப்பில் ஸ்ட்டேட்டஸில் முன்பெல்லாம் வார்த்தைகளை மட்டுமே வைக்க முடிந்தது, அதன்பின்னர் போட்டோ, வீடியோ என அனைத்தையும் வைக்கும்படியாக மேம்படுத்தப்பட்டது. ஆனால் இந்த போட்டோ, வீடியோ ஸ்டேட்டஸ் ஆனது 24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.
வாட்ஸ் ஆப் பயனர்கள் பலரும் இதனை வெகுவாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையானது வாட்ஸ் ஆப்பில் மட்டுமல்லாது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் உள்ளது.

இந்த சேவையானது இந்தத் தளங்களில் ஸ்டோரி என்று அழைப்படுகிறது, அந்தவகையில் தற்போது ட்விட்டர் நிறுவனமும் 24 மணி நேரத்தில் மறைந்துபோகும் ஃப்ளீட் வசதியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
அதாவது இதன்மூலம் ட்வீட் செய்யும் தகவல்கள் சரியாக 24மணி நேரத்தில் மறைந்துவிடும். இந்த ட்விட்டரின் ஃப்ளீட் வசதி முதல்கட்டமாக பிரேசிலில் அமலுக்கு வந்தநிலையில், தற்போது இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனர்களுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
நம்முடைய ஸ்டோரியை யார் பார்க்கிறார்கள் என்பதையும் ட்விட்டர் அப்டேட்டில் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, ட்விட்டர் செயலியினைப் பயன்படுத்துவோருக்கே இந்த வசதி கிடைக்கப் பெறும் என்றும், இணையதளங்களில் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.