தற்போது உலகினையே ஆட்டிப்படைத்துவரும் ஒரு சொல் “கொரோனா”, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் 4 மாதங்களைத் தாண்டியும் ஒழிந்த பாடில்லை.
மேலும் தீவிரமாகப் பரவி வருகின்றது, 200 க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கத் தடுமாறுவதோடு, இதன் தாக்கத்தில் இருந்தும் விடுபட முடியாமல் தவிக்கின்றது. உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வழிமுறைகளின் மூலம் சிகிச்சையினை அளித்து வருகின்றது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள போதுமான அளவு போராடுகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவில் கொரோனா நோய்க்கு ஆலோசனை அளிக்கும் விதமாக, மத்திய சுகாதார துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆன்லைன் வழி இயங்கும் eSanjeevani OPD சேவையை துவங்கி உள்ளது.
இந்த சேவையின்மூலம் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாது மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது.
இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையின் மூலம் லேப்டாப் அல்லது மொபைல் போன் மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.
தற்போது இந்த சேவையானது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், உத்தர்காண்ட், பஞ்சாப், பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது.