கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அலுவலகங்களில் வேலைபார்ப்போருக்கு வீட்டில் இருந்து வேலை பார்த்தல், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்று இருந்து வருகின்றது.
அதேபோல் பல இடங்களில் நிறுவனங்களில் ஆட்குறைப்பும் பொருளாதார நெருக்கடியினை ஒட்டி செய்யப்பட்டது. அந்தவகையில் ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் நிறுவனத்திலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருட்களை சேர்த்து வைத்தும் குருகிராம் கிடங்கில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறைவான நபர்கள் மட்டுமே வேலைபார்த்த நிலையில், குருகிராம் கிடங்கில் வேலை பார்த்த இரண்டு ஊழியர்கள் தினசரிக்கு ஒரு மொபைல் என்ற அளவில் தினமும் மொபைல் போன்களை திருடி வந்துள்ளனர்.

இந்த சம்பவமானது தொடர்ந்து அரங்கேறிய நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட, போலீசில் இவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் மொத்தம் 78 மொபைல் போன்களை திருடி உள்ளதாகக் கூறினர், 38 ஸ்மார்ட்போன்கள் தற்போது மீட்கப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள 40 போன்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 78 போன்களின் மொத்த மதிப்பானது ரூ.1கோடி என்பது குறிப்பிடத்தக்கது.