சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 117 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
தற்போது சீனாவில் 1,75,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 8000 க்கும் மேற்பட்டோர் உலக அளவில் உயிர் இழந்துள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோய்க்கான தீர்வுகள் குறித்தும் பலவிதமான மருத்துவக் குறிப்புகள் குறித்து பேஸ்புக்கில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இந்தத் தகவல்கள் தற்போது, அதிக அளவில் போலியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதனால் கூகுள் நிறுவனம் போலித் தகவல்களை நீக்குவது குறித்து முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியது, “கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளோம். மேலும் இதுவரை கொரோனா வைரஸ் பற்றி யூடியூபில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வீடியோக்களை நீக்கி உள்ளோம்.
மேலும் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகள் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் மேப்ஸ் சேவையில் உள்ள உடல்நல மையங்கள் சார்ந்த போலி விவரங்களை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.” என்று கூறியுள்ளார்.