Gadgets

ரூ.799 விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் மி டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம்!

Mi நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

1.   டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலின் விலை- ரூ.799

இந்த இயர்போன் தற்போது Mi.com தளத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்த இயர்போன் பல குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது, அதாவது பாதுகாப்பு அம்சமாக இந்த இயர்போன் மேக்னெட்டிக் லாக் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

ரூ.799 விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் மி டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம்!

இந்த டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன் ஆடியோ தரத்தை சிறப்பாக கொடுக்க, சிறப்பான ஆடியோ அவுட்புட் வசதி கொண்டுள்ளது.

இந்த இன்-இயர் ஹெட்போன்ஸ் டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் ஆகும். அதாவது இது இரண்டு டூயல் டிரைவர்கள் கொண்டுள்ளது.

செயல்பாடுகளைப் பொறுத்தவரை பொதுவான டூயல் டிரைவர் இயர்போன்களைப் போலவே இயங்கக் கூடியதாக உள்ளது.

இந்த இன்-இயர் இயர்போன் ஆனது பல அதிர்வெண்களில் செயல்படும் தன்மையானதாகவும், குறிப்பாக நடுத்தர மற்றும் உயர் அதிர்வெண்களில் சிறப்பாக செயல்திறன் கொண்டதாக உள்ளது.

நாய்ஸ் கேன்சலேஷன் எனப்படும் அம்சம் கொண்டுள்ளது, அதாவது பின்புறத்தில் உள்ள சத்தத்தினைக் குறைத்து, தேவையான ஒலியில் கூடுதல் கவனம் செலுத்தும் வசதி கொண்டதாக இருக்கிறது.

இந்த புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடல் 10mm டிரைவர் மற்றும் 8 mm டிரைவரை கொண்டுள்ளது.

இந்த இயர்போன் 3 பட்டன் கண்ட்ரோலர் வசதி கொண்டுள்ளது. இது வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது. 3.5 mm ஆடியோ போர்ட் 90 டிகிரியில் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று வெளியான BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!!

TechNews Tamil

ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி இயர்போன்!!

TechNews Tamil