வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது, அலைக்கற்றைக்கான தொகையினை மத்திய அரசுக்கு செலுத்தமுடியாத நிலையில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தவித்துவருவது அனைவரும் அறிந்த விஷயமே ஆகும்.
இதனால் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் ஜியோ கடுப்பேற்றும் வகையில் ஆஃபர்களை அறிவித்து, வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

அதேபோல், ஏர்டெல் நிறுவனமும் ஆஃபர்களை வழங்கி, வாடிக்கையாளர்களைக் கவர அசத்தலான திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏர்டெல்லின் இந்த ஆஃபர்களுக்கு வோடபோன் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
அதாவது வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது, இந்த டேட்டாவானது ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டங்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா ஏற்கனவே வழங்கப்பட்டநிலையில், கூடுதலாக 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, இனி இந்தத் திட்டங்களுக்கு 3 ஜி.பி. டேட்டா கிடைக்கும் என்று, வோடபோன் ஐடியா சலுகையை அறிவித்துள்ளது.