Apps

வாட்ஸ் அப் வேண்டாம்.. சிக்னல் மற்றும் டெலிகிராமுக்கு மாறிய பயனர்கள்!!

தற்போது வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தப் பாலிசியில் பயனர்கள் வாட்ஸ்அப்பினை  எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் இணையத்தில் எதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற பிற இணையப் பயன்பாடுகளையும் கண்காணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த கொள்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பயனர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ் அப் கூறியுள்ளது.

வாட்ஸ் அப் வேண்டாம்.. சிக்னல் மற்றும் டெலிகிராமுக்கு மாறிய பயனர்கள்!!

வாட்ஸ் அப்பின் இந்த தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் இணைய சுதந்திரத்தைப் பறிப்பதாக வாட்ஸ் அப் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் தங்களின் தனியுரிமையினைப் பாதிப்பதாக நினைத்து வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.

அந்தவகையில் வாட்ஸ் ஆப் போன்றே அம்சத்தினைக் கொண்டுள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் பயனர்கள் மத்தியில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேறிய பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் அதிக அளவிலான சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளதாகக் கூறியுள்ளனர். வாட்ஸ் அப்பின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு பயனர்கள் மத்தியிலான எதிர்ப்பினை இது காட்டுகிறது.

Related posts

டெலிவரி பாட்னர்களுக்கு இலவச கொரோனா மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஸ்விக்கி!!

TechNews Tamil

ஏர்டெல்: ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம் இலவசம்!!

TechNews Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள Remove China Apps!!

TechNews Tamil