அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் முதன்மை வணிகம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒலியொளியோடை வசதியை வழங்குவது ஆகும்.
அதாவது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இணைய ஒலியொளியோடையை பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்நிறுவனமானது சீனா, சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா, நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

ஊரடங்கினால் வீட்டிற்குள் மாணவர்கள் அடங்கியிருக்கும் இந்த நிலையில் நெட்பிளிக்சு புதிய முயற்சியாக யூடியூப் சேனலில் Our Planet and Explained போன்ற சில டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் சீரீஸ்களை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்து வருகின்றனர். இணையப் பயன்பாடு அதிகமாக உள்ள இந்த ஊரடங்கு காலத்தில், நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளதையடுத்து தற்போது ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில் Netflix US YouTube சேனலில் எங்கள் டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்கள் இலவசமாக கிடைக்கும்படி நெட்பிலிக்ஸ் கூறியுள்ளது.