கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
பால், மளிகை, மருந்துக் கடை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் வெளியில் சென்று அடிக்கடி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் விற்பனையும் முடக்கப்பட்டுள்ளநிலையில், ஆப்லைன் வியாபாரம் செய்யும் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டதா இல்லையா என்பதை அறிவிக்க கூகுள் ஒரு திட்டத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் கடை உரிமையாளர்கள் கடை மூடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இதில் தேர்வு செய்யலாம். மேலும் செயல்படும் நேரத்தையும், குறிப்பிடலாம்.
‘கூகிள் தனது வணிகம் என்பதில் உள்நுழைந்து, இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டனில் தகவல் என்ற வார்த்தையினை கிளிக் செய்து, அதில் தற்காலிகமாக மூடப்பட்டது, நிரந்தரமாக மூடப்பட்டது, பட்டியலை அகற்று போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைத் தேர்வு செய்தல் வேண்டும்.