நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது, வாட்ஸ்அப் மெசேஜை உங்களைத் தவிர யாரும் பார்க்க முடியாதபடி எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில்
Archive Chat செய்யும் வழிமுறை:
1. வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ள வேண்டும்
2. Chat பகுதியில் குரூப் மெசேஜ், தனி நபர்
மெசேஜ் இருக்கும்.
3. அவற்றில் யாருடைய மெசேஜை மறைக்க வேண்டுமோ, அதை நீண்ட
நேரம் (Long Press) டச் செய்ய வேண்டும்.
4. இப்போது வரக்கூடிய சேட் ஆப்ஷனில் ‘Archive Chat’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. நீங்கள் மறைக்க விரும்பிய சேட் மெசேஜ்
எல்லாம் இப்போது Archive List இல் சென்று விடும்.
சாதாரணமாக வாட்ஸ்அப் ஓபன்
செய்தால் பார்க்க முடியாது. Chat Screen இல் Archived Chats என்ற ஆப்ஷனில் சென்றால் மட்டுமே இதை பார்க்க முடியும். அதை மீண்டும் லாங் பிரஸ் செய்து Unarchive
செய்தால், பழையபடி மாறிவிடும்.
இந்த வசதியின் மூலம் குரூப் சேட், தனி நபர் சேட் என எந்த மெசேஜ் சேட்டிங் வேண்டுமானாலும்
மறைத்துக் கொள்ள முடியும். Archive என்பது உங்களது
மெசேஜை டெலிட் செய்து விடாது. அதே நேரத்தில் மெமரி
கார்டிலும் சேமிக்காது.