தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு நிறுவனங்களும், ஆஃபர்களை அள்ளி இறைத்து வருகிறது, வாடிக்கையாளர்களை திணறவைக்கும் வகையில் அமேசான், ஃப்ளிப் கார்ட், ஸ்னாப் டீல், விவோ, சியோமி, ஒப்போ, விவோ போன்ற அனைத்து நிறுவனங்களும் ஆஃபர்களை இறைத்து வருகிறது.
அந்த வகையில் விவோ நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.
இன்று முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு இந்த சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

ஆஃபரில் விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ், வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 போன்ற போன்கள் கிடைக்கப் பெறும்.
அதாவது இந்த ஸ்மார்ட் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் முழுப் பணத்தையும் செலுத்த தேவையில்லை.
ரூ. 101 மட்டும் செலுத்தினால் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனினை வாங்க முடியும்.
அதன்பின்னர் மாதத் தவணையாக ரூ. 926 செலுத்தினால் போதுமானது. மேலும் இந்த தவணை முறை வட்டியில்லா மாத தவணை முறை வசதியாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.