கொரோனா வைரஸ் காரணமாக தகவல் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்தியா முழுவதும் லாக்லவுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் டிஷ் டிவி தற்போதுவரை நான்கு சேனல்களை இலவசமாக வழங்கி வருகின்றது.
இந்த இலவச சேவையானது பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், இப்போது கூடுதல் கட்டணமில்லாமல் மற்றொரு பே சர்வீஸ் சேனலை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த இலவச சலுகையினைப் பெற விரும்புவோருக்கு பலவிதமான விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

அதாவது குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ரீசார்ஜ் செய்யும் டிஷ்டிவி பயனர்களுக்கு மட்டுமே ரூ.60 மதிப்புள்ள இலவச சினி ஆக்டிவ் சேனல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 12மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்பதிவு செய்தால் 30நாட்கள் வரை இலவச சேவையை வழங்குகிறது.
மேலும் வாடிக்கையாளர்கள் மூன்று ரீசார்ஜ் செய்வதன் மூலம் 7நாட்கள் கூடுதல் சேவையையும், ஆறு மாதங்கள்ரீசார்ஜ் செய்வதன் மூலம் 15நாட்கள் கூடுதல் சேவையையும், 12மாதங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 30நாட்கள் இலவச சேவையையும் பெறலாம்.
இந்த இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் இதனைப் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.