டிஷ் டீவி மற்றும் டி2எச் வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க்குகளை காட்டிலும், அதிக அளவிலான சலுகைகளை அறிவித்துள்ளது.
தற்போது, மிகப் பெரிய பிளான்களைப் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளது டிஷ் டிவி மற்றும் டி2எச் சேவைகள்.
10 மாதங்களுக்கு டிஷ் சேவையை கட்டணம் செலுத்தி பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கியுள்ளது டிஷ் டிவி.

6 மாதங்களுக்கு டிஷ் சேவையை கட்டணம் செலுத்தி பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாதத்திற்கு இலவச சேவைகளை வழங்கியுள்ளது டிஷ் டிவி..
டிஷ் டிவியைத் தொடர்ந்து டி2எச் நிறுவனமும் மூன்று மாதங்களுக்கு சேவையை கட்டணம் செலுத்தி பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 14 நாட்கள் இலவச தொலைக்காட்சி சேவைகளையும், 6 மாதங்களுக்கு டி2எச் சேவையை கட்டணம் செலுத்தி பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 1 மாத இலவச சேவையினையும் , 10 மாத மாதங்களுக்கு டி2எச் சேவையை கட்டணம் செலுத்தி பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கியுள்ளது.