ஓலா நிறுவனம் கடந்த மே மாதம் எஸ் பி ஐ வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து, ஓலா மனி எஸ்பிஐ கிரடிட்
கார்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய வாடிக்கையாளர்களைப்
பயன்படுத்த ஊக்குவிக்கவும், பழைய வாடிக்கையாளர்களை நழுவ விடாமல் இருக்கவும் இந்த தள்ளுபடியை வழங்கியது ஓலா நிறுவனம்.
இதற்கு முன்னர் பேடிஎம் நிறுவனம், சிடி வங்கியுடன்
இணைந்து பேடிஎம் கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது, அந்தத்
திட்டம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக போக, ஓலா நிறுவனமும் இதனை வெளியிடத் தயாரானது.

ஓலா நிறுவனம், ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளை, விசா நிறுவனத்தினலான கார்டுகளாக அளிக்கவுள்ளது. இந்த கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிட்த்தக்கது
2022-ஆம் ஆண்டிற்குள் 1 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓலா கிரடிட் கார்டுகளை வழங்கியிருக்க வேண்டுமென்ற இலக்கையும் நிர்ணயித்துள்ள ஓலா நிறுவனம் தற்போது மேலும் 4 % தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஓலாவின் கார்டுகள் மூலம் கார்களை புக் செய்பவர்களுக்கு, 7 சதவிகித கேஷ்பேக், விமான புக்கிங்களுக்கு 5 சதவிகித கேஷ்பேக் உள்நாட்டு ஹோட்டல் புக்கிங்களுக்கு 20 சதவிதமும், வெளிநாட்டு ஹொட்டல் புக்கிங்களுக்கு 6 சதவிகித கேஷ்பேக், மேலும் இந்தியாவிலுள்ள 6,000-திற்குமேற்பட்ட உணவகங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும், மேலும், இந்த கார்டுகள் மூலம் செய்யும் மற்ற செலவுகளுக்கு 1 சதவிகித கேஷ்பேக் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.