சாம்சங் கேலக்ஸி M30 மற்றும் கேலக்ஸி M20 ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபரின்படி, சாம்சங் கேலக்ஸி M30 போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன், 13,990 ரூபாய்க்கு விற்கப்படும். இதன் முந்தைய விலை, 14,990 ரூபாயாக இருந்தது. அதே போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 16,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதன் விலை 17,990 ரூபாய் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி M20-யின் 3ஜிபி + 32ஜிபி வகை 9,990 ரூபாய்க்கு கிடைக்கும். அதே நேரத்தில் அந்த போனின் 4ஜிபி + 64ஜிபி வகை 11,990 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த இரண்டு போன்களின் விலைகள் முறையே 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளன.

அமேசான் தளத்தில், இந்த போன்களை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால், உடனடி 5 சதவிகித கேஷ்-பேக் கொடுக்கப்படும். அனைத்து போன்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் உள்ளன.
கேலக்ஸி M வரிசை போன்களுக்கு போட்டியாக ரியல்மீ மற்றும் சியோமீ நிறுவனங்கள் அடுத்தடுத்து பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே இந்த ஆஃபர்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.