நோக்கியா நிறுவனம் தற்போது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி ஆஃபரை அறிவித்துள்ளது.
- நோக்கியா 2ஜிபி ரேம் உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.5,999 (முந்தைய விலை ரூ.6,599)
- நோக்கியா 3ஜிபி ரேம் உள்ளடக்க மெமரி வகையின் விலை- ரூ.6,999 (முந்தைய விலை ரூ.7,599)
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 16 எம்பி முதன்மை கேமரா, 8எம்பி வைடு ஆங்கள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 8எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.0 யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டதாக உள்ளது.
மேலும் இது 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.