Mobile

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது நம்பமுடியாத விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.13,999 (தற்போதைய விலை- ரூ.9,999)
  2. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.14,999 (தற்போதைய விலை- ரூ.10,999)
  3. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ வகையின் விலை- ரூ.16,999 (தற்போதைய விலை- ரூ.13,999)
ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது. மேலும் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி செகன்டரி சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 13எம்பி ஏஐ செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பொங்கலை ஒட்டி அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil