டீடெல் நிறுவனம் 32 இன்ச் அளவிலான எல்இடி
டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இது அறிமுகமான சில மணி நேரங்களிலேயே
அதிரடியாக வரவேற்பினைப் பெற்றது. இது வரலாறு காணாத வரவேற்பாக இருந்தது.
ஏன்
இவ்வளவு வரவேற்பு என்கிற அளவு அனைவரும் கேட்டுவர, காரணம் இதன் விலை மட்டுமே ஆகும்
வெறும் ரூ.6,999 என்ற மலிவு விலையில் இது அறிமுகமாகியுள்ளது.
இந்த Detel 32-inch Star TV
டிவியை டீடெல் நிறுவனத்தின் ஆப் மூலமாகவோ அல்லது அந்த
நிறுவனத்தின் வலைதளம் மூலமாகவோ வாங்க முடியும்.

பலருக்கும்
அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த 32 இன்ச் டிவியில் A+ கிரேடு பேனல் உள்ளது, இது 3,00,000: 1 என்ற மாறுபட்ட விகிதத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. இது 1280 x 720 பிக்சல்கள் என்ற அளவிலான
திரை தீர்மானத்தையும் கொண்டுள்ளது.
இதில் HDMI மற்றும் USB போர்ட்கள் போன்ற இணைப்பு
விருப்பங்களும் உள்ளது. இது இரண்டு 10W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம்
ஏற்கனவே அறிமுகம் செய்த 17-inch LED TV ஆனது உலகின் மிக மலிவான டிவி என்ற பெயரினைப் பெற்றது. இந்த டிவி உற்பத்திக்குப் பின்னரே இந்த நிறுவனம் பெரிதளவில் பெயர் பெற்றது. அதன் விலை வெறும் ரூ.3,699 ஆகும்.