மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது, இந்த மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் குறித்து இணையதளங்களில் வெளியாகிய தகவலின்படி, மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது..

மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை, 3 ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.
கேமராவினைப் பொறுத்தவரை முன்புறத்தில் நாட்ச் டிசைன் செல்பி கேமரா கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.