Gadgets

6 புதிய லேப்டாப் மாடல்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்த டெல்.!

டெல் நிறுவனம் தற்போது 6 புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது

  1.  டெல் எக்பிஎஸ் 13,
  2. டெல் இன்ஸ்பிரான் 14,
  3. டெல் எக்பிஎஸ் 15,
  4. டெல் இன்ஸ்பிரான் 7391,
  5. டெல் ஜி3 மற்றும்
  6. டெல் ஏலியன்வேர்

என ஆறு லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

6 புதிய லேப்டாப் மாடல்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்த டெல்.!

டெல் எக்பிஎஸ் 13:

டெல் எக்பிஎஸ் 13 மாடலைப் பொறுத்தவரை,  4கே டிஸ்பிளே ஆதரவு மற்றும் 10-வது ஜென் இன்டெல் பிராசஸர், கோர் ஐ7 ஆதரவு, யுஎஸ்டி கிராபிக்ஸ்,

16GB LPDDR4x ரேம் மற்றும் 521ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவைகளைக் கொண்டதாக இது உள்ளது. இதன் விலை மதிப்பு ரூ.1,13,990 ஆகும்.

டெல் எக்ஸ்பிஎஸ் 15:

டெல் எக்ஸ்பிஎஸ் 15 மாடலைப் பொறுத்தவரை, 15-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே 10-வது ஜென் இன்டெல் கோர் பிராசஸர், தண்டர்போல்ட் 3 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.1,66,990 ஆகும்.

டெல் இன்ஸ்பிரான் 14:

டெல் இன்ஸ்பிரான் 14 மாடலைப் பொறுத்தவரை, 14-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 10-வது ஜென் இன்டெல் பிராசஸர் என்விடியா ஜியிபோர்ஸ் MX250 GPU, தண்டர்போல்ட் 3.0 போர்ட், இரட்டை யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள், ஒற்றை யூ.எஸ்.பி 2.0 போர்ட், போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.57,990 ஆகும்.

டெல் இன்ஸ்பிரான் 2-இன்-1

டெல் இன்ஸ்பிரான் 2-இன்-1 மாடலைப் பொறுத்தவரை, 13.3-இன்ச் டச் டிஸ்பிளே, 10-வது ஜென் இன்டெல் பிராசஸர் உடன் என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 250, தண்டர்போல்ட் 3.0 போர்ட், எச்.டி.எம்.ஐ போர்ட்,யூ.எஸ்.பி 3.1 போர்ட், போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விரை ரூ.86,890 ஆகும்.

டெல் ஜி3

டெல் ஜி3 லேப்டாப் மாடலைப் பொறுத்தவரை, 1080 பிக்சல் திர்மானத்துடன் கேமிங்கிற்கு மிகச் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.70,990 ஆகும்.

டெல் ஏலியன்வேர் எம்15

டெல் ஏலியன்வேர் எம்15 கேமிங் மாடலைப் பொறுத்தவரை, 15.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 9-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.1,88,490 ஆகும்.

Related posts

Vivo Z1x 3 இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அறிமுகமானது தைவா ஸ்மார்ட் டிவிக்கள்!

TechNews Tamil

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

TechNews Tamil