Apps

1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனா ஆதரவு ட்விட்டர் கணக்குகள் நீக்கம்!!

உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று, ட்விட்டர் ஆகும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமின்றி ட்விட்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.

2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், தற்போது  பெரிய அளவிலான வளர்ச்சியுடன் 33 கோடி பயனர்களைக் கொண்டதாக உள்ளது.

ட்விட்டரில் அவ்வப்போது விதி மீறல்களால் அக்கௌண்ட்டுகள் நீக்கப்படும் செயல்கள் நடைபெறும். அந்த வகையில், சீனாவுக்கு ஆதரவான செய்திகளை பதிவிடுவதற்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.

1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனா ஆதரவு ட்விட்டர் கணக்குகள் நீக்கம்!!

அதாவது ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவல் போன்ற விஷயங்களில் தவறான தகவல்களை முன் வைத்த 1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள்,  சில கணக்குகளில் வெளியிடப்பட்ட பதிவுகளை மறு ட்விட் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

அதாவது ட்விட்டரின் விதி மீறல்கள் என்ற கருத்தின்படி, இந்த 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கணக்குகளில் பெரும்பான்மையானவை ஜனவரிக்குப் பின்னர் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

அதிரடியாக ஆஃபர்களை அறிவித்து மக்களை உறையவைத்த ஃப்ளிப்கார்ட்!

TechNews Tamil

பாதுகாப்பான அம்சங்களுடன் தயாராகிவரும் டெலிகிராம் வீடியோ கால் வசதி!

TechNews Tamil

ஜியோவில் ஈஸியா ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி.!

TechNews Tamil