தீபாவளிப் பண்டிகையானது நாளை உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் கொண்டாடப்பட உள்ளது, கொரோனா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது திரும்பியுள்ள மக்கள் ஊரடங்கிற்குப் பின்னர் முதல் பண்டிகையாகத் தீபாவளியினைக் கொண்டாட உள்ளனர்.
இதனால் மற்ற ஆண்டுகளைவிட தீபாவளியினைக் கொண்டாடுவதிலும் தீபாவளிக்கான பொருட்களை வாங்குவதிலும் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு வார காலமாகவே தீபாவளி சார்ந்த பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் விர்ச்சுவல் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டமாக சில சிறப்புமிக்க அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது.

அதாவது வீட்டில் தீபாவளி கொண்டாடுவதை புகைப்படமாக்கி, #DiwaliAtHomeChallenge என்ற ஹேஷ்டேக் மூலம் மற்றவர்களையும் பேஸ்புக்கில் தீபாவளி கொண்டாட அழைக்கலாம்.
தீபாவளியினையொட்டி வெளியாகியுள்ள இந்த #DiwaliAtHomeChallenge என்ற ஹேஷ்டேக் பேஸ்புக் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.