இந்திய வருமான வரித்துறை பான் எண் எனப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி என்று அறிவித்து இருந்தது.
ஆனால் அதற்குபின் இந்தக் காலக் கெடுவானது மீண்டும் நீட்டிக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக் கெடுவானது மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் மக்கள் தவித்துவரும் நிலையில், இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 30 ஆம் தேதி என்று மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த காலக் கெடுவுக்குள் ஆதாரை பாண் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டையானது செயலற்றதாக அறிவிக்கப்படும் என வருமானத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தத் தேதிக்குள் இணைப்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.