வாட்ஸ் அப் மற்ற அப்களை விட எளிதில் பிரபலமாகக் காரணம், பயன்படுத்தும் முறை மிக எளிதானது என்பதாலேயே ஆகும்.
பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயிலிக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் ஸ்டேபில் அப்டேட் மே மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்மார்ட்போன்களுக்கான, டார்க் தீம் வசதி வழங்கப்பட்டதும், டார்க் தீம் வசதி வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு வழங்குவதற்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
அதேபோல் தற்போது, வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பலாம் என்ற வாட்ஸ் ஆப் பே வசதியும் சோதனைகளை முடித்து வெளியிட வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது.
இச்சேவை, இன்னும் 6 மாதங்களில் பணத்தினை எளிதில் அனுப்பும் வகையில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.