உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்று வாட்ஸ்ஆப். இந்தியாவில் கோடிக்கணக்கான வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ளனர். வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து புது அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் துவகத்தில் டார்க் தீம் சேவையை அறிமுகம் செய்தது. அதாவது இந்த டார்க் மோடு சேவையானது கண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதாய் இருக்கும்.
அதனைத் தொடர்ந்து இந்த டார்க் மோடு சேவையானது ஃபேஸ்புக்கில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது பேஸ்புக் நிறுவனம் ஒருவழியாக அதன் டெஸ்க்டாப் பயனர்களுக்கு டார்க் மோட் பயன்முறையைத் தேர்வு செய்வதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.
மேலும் இந்த அறிவிப்பினை பேஸ்புக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, அதாவது, “இன்று முதல், பேஸ்புக்கில் பெரும்பான்மையானவர்கள் புதிய டெஸ்க்டாப் வடிவமைப்பை அணுக முடியும்” என்று அறிவித்துள்ளது.
பேஸ்புக்கில் டார்க் மோடு சேவையானது வெளியாவது குறித்து ஜனவரி மாதத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தநிலையில், இன்று அறிமுகமாகி பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் என அனைத்துவகையான செயலிகளிலும் இந்த டார்க் மோடு வசதி வந்துள்ள நிலையில், ஒருவழியாக பேஸ்புக்கிலும் வந்துவிட்டது.