Apps

கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதி அம்சம்!!

கூகுள்  நிறுவனம்  பல புதிய அப்டேட் கொண்டு வந்தது கொண்டே இருக்கிறது, அந்த வகையில் கூகுள்  மேப்பில் மக்கள் பயனடையும் வகையில் பல புதிய தகவலை கொண்டு வந்தது.

சமீபத்தில் கூகுள் மேப்பில் AR நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் மற்றும்  நீங்கள் செல்லும் வழியியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதையும் நீங்கள் இங்கு எளிதாக அறியலாம்.

இந்தவகையில் கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த அம்சமானது தற்போதைக்கு ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகின்றது.

கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதி அம்சம்!!

ஆண்ட்ராய்டு 11 தளத்தின் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10.51.1 டார்க் மோட் வசதியை வழங்குகிறது. இந்த அம்சமானது முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

மேலும் முதற்கட்ட சோதனையை அடுத்து, இந்த அம்சமானது அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிகின்றது.

மேலும் இந்த செயலியின் கீழ்புறத்தில் லைட் தீம், டார்க் தீம் அல்லது சிஸ்டம் தீமுடன் சின்க் செய்வது என பல வகையான தேர்வுகளும் வழங்கப்படுகின்றது.

Related posts

ஜியோ—வாட்ஸ் ஆப் கூட்டமைப்பில் இந்தியாவில் ஜியோ மார்ட் சேவை துவக்கம்!!

TechNews Tamil

கடை திறந்திருக்கான்னு தெரியணுமா? கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அம்சம்!!

TechNews Tamil

டிக் டாக்கிற்கு கடும் சவால்: 1 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்துள்ள மித்ரன் செயலி!!

TechNews Tamil