Apps

ட்ரூ காலர் மீது அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!!

சில சமயம் தெரியாத நம்பர்களிலிருந்து வரும் போன் அழைப்புகளை யார் என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஆப்தான் ட்ரூகாலர். உலகம் முழுவதும் இதை பல மில்லியன் மக்கள் உபயோகித்து வருகிறார்கள்.

மிகவும் பயனுள்ள ஆப்பாக அனைவராலும் கருதப்பட்ட இந்த ஆப் மீது சர்ச்சை கிளம்பியுள்ளது. ட்ரூகாலர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் பணபரிவர்த்தனை செய்யும் வசதியை மற்ற ஆப்கள்போல் அறிமுகப்படுத்தியது. ஆனால் அது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

ஆனால் தற்போது ட்ரூகாலரின் அப்டேட் வெர்சனை வெளியிட்டது ட்ரூகாலர் நிறுவனம். அதை அப்டேட் செய்தவர்களின் ட்ரூ காலர் விவரங்களுடன் வங்கி விவரங்கள் தானாகவே ட்ரூகாலர் யூபிஐ செயலியில் இணைந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரூ காலர் மீது  அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!!

இது பெரிய அளவில் பிரச்சினையாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், ட்ரூகாலர் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட அப்ளிகேசனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் ட்ரூ காலரை பயன்படுத்த பலரும் தயங்கிய நிலையில், உடனே அந்த அப்டேட் வெர்சனை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

அனுமதியின்றி வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டதனால் பெரும்பாலானோர் ட்ரூகாலர் பயன்படுத்த்தைக் குறைத்துள்ளணர்.

Related posts

டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள ரெஸ்சோ செயலி!

TechNews Tamil

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2019: அதிரடியான தள்ளுபடிகள் அறிவிப்பு

TechNews Tamil

உலக சுகாதார மையத்துடன் இணைந்து வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள `Together at home’ ஸ்டிக்கர்கள்!!

TechNews Tamil