கொரோனாவினைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு பலவிதமான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. கொரோனா வைரஸினால் சீனாவில் 3100 பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 6000 பேர் கவலைக்குரிய நிலைமையில் உள்ளனர்.
சீனாவினைத் தொடர்ந்து, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளும் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. ஈரானில் ஏறக்குறைய 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவாமல் தடுக்க பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதன் பாதிப்பு தீவிரமாகி வருவதால், இந்திய அரசும் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் மற்ற நாடுகளுக்கு சென்று விளையாடவுள்ள போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ளது.

மேலும் பல்வேறு வகையான சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு தற்காப்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் சேர்த்து கைகழுவும் சானிடைஸர் பாக்கெட் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது.